Thursday, November 27, 2008

472. மும்பை பயங்கரம் - கோர்வையில்லா எண்ணங்கள்

நேற்றிரவில் ஆரம்பித்த (தற்கொலைப்படை)தீவிரவாதத் தாக்குதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஹோட்டல்கள், ரயில் நிலையம், மருத்துவமனை, களிப்பிடம் என்று கிட்டத்தட்ட பத்து இடங்களில் ஒரே நேரத்தில் ஒரு ராணுவ படையெடுப்புக்கு இணையான திட்டம் தீட்டுதலோடு தாக்குதல் நடந்தேறியுள்ளது. கடைசியாக வந்த தகவல்களின்படி தாஜ் ஹோட்டலில் சிக்கியிருந்தவர்கள், கடுமையான துப்பாக்கிச் சண்டையின் முடிவில் மீட்கப்பட்டு விட்டார்கள். ஹோட்டலின் தளங்களில் 40 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. எஞ்சியிருந்த 4 ஃபியாதின் அரக்கர்கள் கமேண்டோக்களின் இறுதித் தாக்குதலில் பலியாயினர். தீவிரவாதிகளை மும்பைக் கரையில் இறக்கி விட்டதாக நம்பப்படும் MV Alpha என்ற வியட்னாமிய கப்பலை, கடற்படை ஹெலிகாப்டர்கள் துரத்திச் சென்றுள்ளதாகவும் ஒரு செய்தி வந்துள்ளது.

இக்கட்டானதொரு தேசியச் சூழலில், பிஜேபி இதை அரசியலாக்காமல் அரசோடு கை கோர்த்துள்ளது ஆறுதல் அளிப்பதாக உள்ளது. பிரதமரும், அத்வானி அவர்களும் ஒன்றாக மும்பை செல்ல இருப்பதாக செய்தி வந்துள்ளது. இந்த நேரத்திலாவது ஒற்றுமை பேணுவதின் அவசியத்தை உணர்ந்துள்ள அரசியல்வாதிகளுக்கு நன்றி. தீவிரவாத ஒழிப்புக் குழுவின் (ATS) தலைவர் ஹேமந்த் கர்காரே, விஜய் சலாஸ்கர், அஷோக் காம்தே ஆகிய தலைசிறந்த போலீஸ் அதிகாரிகள், தீவிரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் உயிர் நீத்தது தீவிரவாத எதிர்ப்புக்கு பேரிழப்பு.


இவர்களைப் போன்ற மூத்த அனுபவமிக்க ஆற்றல் மிக்க அதிகாரிகள், ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். Leading by example என்பது எல்லா நேரங்களிலும் சரியான அணுகுமுறை ஆகாது. இவர்களின் உயிர் மதிப்பற்றது. தீவிரவாத ஒழிப்புக்கு இவர்களின் சீரிய பணி / தலைமைப்பண்பு நாட்டுக்கு மிக மிக அவசியம். அதனால், திட்டம் தீட்டுவதிலும், தங்களது அணி வீரர்களை வழி நடத்துவதிலும், இன்னும் பல அதிகாரிகளை உருவாக்குவதிலும் இவர்கள் பெரும்பங்கு ஆற்ற வேன்டியுள்ள சூழலில், முன் சென்று உயிரிழப்பதால் அவர்களுக்குக் கீழே பணியாற்றுபவர்கள் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் இழக்கின்றனர்!

காஷ்மீரத்து விடுதலையை முன்வைத்துத் தான் இத்தீவிரவாதிகள் இது போன்ற அக்கிரமச் செயல்களில் ஈடுபடுகிறார்களா என்பது தெளிவாக இல்லை. மும்பைத் தாக்குதலில் லஷ்கரின் கை இருப்பதாக கூறப்படுகிறது. டெக்கான் முஜஹிதீன் என்ற தீ.அமைப்பு இதற்கு பொறுப்பேற்றுள்ளது. இது ஹைதரபாத்திலிருந்து செயல்படுகிறதா ? காஷ்மீரில் ஒரு referendum வைத்து, அதன் அடிப்படையில் காஷ்மீரை பிரித்துக் கொடுக்கும் பட்சத்தில், அங்குள்ள அனைத்துத் தீவிரவாத இயக்கங்களும் இந்தியாவுக்கு எதிரான பயங்கரத் தாக்குதல்களை நிறுத்தி விடுமா ? பதில் தெரியவில்லை!

ஒன்று தெளிவாக உள்ளது. குறிப்பாக அயல்நாட்டினரை குறிவைத்திருப்பதை வைத்துப் பார்த்தால், தீவிரவாதிகளின் நோக்கம், ஒரு தீவிரமான பாதுகாப்பற்ற சூழல் இந்தியாவில் நிலவுகிறது என்ற எண்ணத்தை/அச்சத்தை அயல்நாட்டவர் மனதில் விதைத்து, அவர்களை இங்கே வரவிடாமல்/எந்த முதலீடும் செய்யவிடாமல் விரட்டி அடிப்பது தான். சுற்றுலா, வணிகம்,வர்த்தகம் என்று வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவை, பொருளாதார அளவில் வீழ்ச்சியடைய வைத்து நாசமாக்குவது தான் தீவிரவாதத்தின் குறிக்கோள். பாகிஸ்தானிய பொதுமக்களுக்கு இம்மாதிரி குறிக்கோள் இல்லாவிட்டாலும், யாருக்கும் கட்டுப்படாத பாகிஸ்தானிய உளவு ஸ்தாபனமான ISI-க்கு எல்லா தீவிரவாதித் தாக்குதல்களிலும் பெரும்பங்கு இருப்பதாகவே தோன்றுகிறது. ISI தனது இந்திய ஒழிப்புப் பணிக்கு காஷ்மீரை trigger-ஆக பயன்படுத்தி, தீவிரவாதத்திற்கு ஆள் பிடிக்கிறது.

தகவல் தொழில்நுட்பத்தில் சிகரம் தொட்டிருக்கிறோம். நிலவுக்கு விண்கலம் அனுப்பியிருக்கிறோம். Defence தொழில்நுட்ப ஆய்வின் மூலம், புதுசு புதுசாக வீரியமுள்ள ஏவுகணைகளை கண்டுபிடித்துள்ளோம். ஏன் தீவிரவாதம் சார்ந்த உளவுத் தகவல் சேகரிப்பதில், தற்காப்பு நடவடிக்கைகளில் கோட்டை விடுகிறோம் ??? இதற்கு அரசு சார்ந்த அமைப்புகளின் அதிகாரிகளையோ காவல் துறையையோ குறை சொல்ல முடியாது. அவர்களிடம் அர்ப்பணிப்பு இல்லை என்று ஒருபோதும் கூற முடியாது. சில கருப்பு ஆடுகள் எங்கேயும் உள்ளன தான். அவர்களுக்கு முழு அதிகாரம் அளித்து, அவர்களை சுதந்திரமாக பணியாற்ற விடுவதில்லை. கேடு கெட்ட அரசியல் தலையீடு எல்லாவற்றையும் குட்டிச்சுவராக்கி விடுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் தீவிரவாத ஒழிப்புக்கென்றே ஒரு அமைப்பை உருவாக்கி, அவற்றுக்கு முழுச் சுதந்திரம் அளித்து, அவை அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்படுவதே ஒரு நல்ல தொடக்கமாக அமையும்.

இல்லையெனில், இது போன்ற தீவிரவாத அவலங்கள் நிற்காமல் தொடரும். நாமும் 3-4 நாட்கள் பதிவுகளிலும், டிவிட்டரிலும், சீரியஸாக விவாதம் செய்து விட்டு, இரங்கலை தெரிவித்து விட்டு, நமது டிவிட்டுகளில் மறக்காமல் ':-(' குறியைப் போட்டு விட்டு அவற்றை மறந்து விடுவோம், அடுத்த குண்டு வெடிப்பு நிகழும் வரை !!! இப்போதுள்ள சூழலைப் பார்த்தால், நமது எதிர்கால சந்ததியினர் எதிர்கொள்ளவிருப்பதை நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.

இன்னொரு விசயம். நம்மைச் சுற்றி இருக்கும் நாடுகளைப் பாருங்கள். சீனாவை நண்பனாக நினைக்கவே முடியாது, நாம் எவ்வளவு இணக்கமாக இருக்க முனைந்தாலும்! சரியான களவாணி நாடு. பங்களாதேஷ், பாக்கிஸ்தான், இலங்கை, நேபால் என்று எந்நேரமும் சண்டையும் குழப்பமும் நிறைந்த failed states வகையறா.

எ.அ.பாலா

Also read: இட்லிவடைப் பதிவு
நண்பன் ஷாஜியின் பதிவு

22 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test :-(

dondu(#11168674346665545885) said...

நான் கூற நினைத்ததை இட்லிவடை கூறிவிட்டார். அதையே எனது பின்னூட்டமாக வைக்கிறேன்.

அமெரிக்காவில் செப்டம்பர் 11 அன்று நடந்த தீவீரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இன்று வரை ஒரு தாக்குதல் கூட அதே இஸ்லாமியத் தீவிரவாதிகளால் நடத்த முடிவதில்லை. காரணம் என்ன? உறுதியான தலமை. உளவுத் துறையின் திறமை. அர்ப்பணிப்பு உணர்வு மிக்க அதிகாரிகள், தலைவர்கள். புஷ் மீது நாம் வேறு என்ன குறை வேண்டுமானாலும் கூறலாம் ஆனால் இன்று வரை அமெரிக்கா தாக்குதலுக்கு உள்ளாகாமல் தப்பித்ததன் காரணம் புஷ்ஷின் உறுதியான தலைமையும், துணிவான சட்டங்களுமேயாகும். அமெரிக்க அரசியல்வாதிகளுக்கு முஸ்லீம்களின் ஓட்டுக்களை வாங்கித்தான் ஜெயிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் கிடையாது. அதே நிலமை இந்தியாவிலும் வர வேண்டும். அமைதியை விரும்பும் இந்திய தேசியத்தின் மீதும் சகோதரத்துவம் மீதும் நம்பிக்கை உள்ள ஒவ்வொரு முஸ்லீம்களும் இதை உணர்ந்து அரசின் கடுமையான சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். அப்படி ஒரு உறுதியான தலைமை இன்று இந்தியாவில் நரேந்திர மோடியைத் தவிர வேறு எவருக்கும் இல்லை. ஒன்று நரேந்திர மோடியைப் பிரதமராக்க வேண்டும் அல்லது இந்தியாவை ராணுவத்திடம் ஒப்படைத்து விட வேண்டும். அவர்கள் இந்தப் பிரச்சினைக்கு என்ன தீர்வு கொடுக்கிறார்களோ அதை செய்து முடித்த பிறகு இந்தியாவுக்கு மீண்டும் ஜனநாயகம் திரும்பினால் போதுமானது. இப்பொழுது தேவை ஓட்டுப் பொறுக்கும் அரசியல்வாதிகள் இல்லாத உறுதியான துணிவான தலமை ஒன்று. அது மோடியிடமும் ராணுவத்திடமும் மட்டுமே உள்ளது. இரண்டு பேர்களில் ஒருவரிடம் இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்கா விட்டால் இந்தியாவை முப்பது முக்கோடி தேவர்களாலும் கடவுள்களாலும் கூடக் காப்பாற்ற முடியாது. என்ன செய்யப் போகிறது இந்தியா? என்ன செய்யப் போகிறார்கள் இந்திய வாக்காளர்கள். இந்தியக் குடிமக்களின் உயிர் அவர்கள் கையில் உள்ள வாக்குச் சீட்டுக்களில் மட்டுமே உள்ளது அதை உணர்ந்து உரிய துணிவான திறமையான தலமையைத் தேர்ந்தெடுக்கா விட்டால் இப்படி அனு தினமும் அநாதையாகச் செத்து செத்து மடிய வேண்டியதுதான்.

இப்போது டோண்டு ராகவன் இன்னும் ஒன்று கூற ஆசைப்படுவான். இஸ்ரவேலர்களை நமது அதிகாரிகள் கலந்தாலோசிப்பது நலம். அவர்களைவிட அதிகத் திறமைசாலிகள் இந்த விஷயத்தில் வேறு யாரும் இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Unknown said...

என்ன பால பண்றது..இங்கு மும்பையில் இந்த பதில் எழுதும்போது மணி இரவு 8:10...
இன்னும் சண்டை முடிஞ்சபாடு இல்லை ....இன்று தெற்கு மும்பையே பொற்காலம் போல உள்ளது...யாரும் வீட்டைவிட்டு வெளியே வர வில்லை...நாளை பொழுது இன்னும் என்னென்ன வைத்திருகிறதோ :((((...
அந்த மூன்று காவல்துறை அதிகாரிகளுக்கும் பெயர் தெரியாத இன்னும் சில வீரர்களுக்கும் என் மனமார்ந்த அஞ்சலி....
நாடு உங்களின் தியாகத்தை என்றும் மறக்காது :(((

enRenRum-anbudan.BALA said...

தீவிரவாதிகளின் நோக்கம் என்று நான் கணித்திருப்பதையே பிடிபட்ட தீவிரவாதியும் சொல்லியிருக்கிறான்.

பார்க்க: http://tinyurl.com/5ejzx3

?!!!@#%* said...

இந்த‌ த‌ட‌வை ந‌ம்முடைய‌ ம‌த்திய‌ அர‌சு விழித்துக்கொண்டு

"எதிரி" நாட்டின் மீது நிப‌ந்த‌னைய‌ற்ற‌ போர் தொடுக்கும் என்று ந‌ம்புவோம்,

:)

எல‌க்ஷ‌ன் டைம் வேற‌,

வையிட் ஃபொர் 2009 வார் டைம்,

ச‌‌ஹ்ரித‌ய‌ன்

கால்கரி சிவா said...

ஓயுதல் செய்யோம்
தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள் சொல்வோம்
பல வண்மைகள் செய்வோம்

இந்த வார்த்தைகள் மனதை தேற்றுகின்றன பாலா..

நேற்றிரவு தூக்கமின்றி தவித்தேன்

said...

நெஞ்சு பொறுக்குதில்லையே ரத்தம் கொதிக்கிறது. எவ்வளவு கேவலமான அரசியல்வாதிகள் பிடியில் நாம் சிக்கியுள்ளோம். நம் எதிரிகள் முஸ்லீம் தீவீர்வாதிகள் அல்ல. மன்மோகனும் லாலுவும், கருணாநிதியும், முலையமும், சோனியாவும் அர்ஜுன் சிங்கும், அமர்சிங்கும் பட்டீலும் இன்னும் ஆயிரக்கணக்கான ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகள்தான்.

முஸ்லீம் தீவீரவாதி கைதானால் தனக்குத் தூக்கம் போகிறது என்கிறார் பிரதமர்

சிமி தீவீரவாதிகள் மீது காங்கிரஸ் பரிதாபம் காட்டி விடுதலை செய்ய வேண்டும் என்கிறார் இத்தாலிய சோனியா மொய்னோ

சிமி தீவீரவாதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்கிறார் லாலு

சி மி பயங்கரவாதிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று கேஸ் போடுகிறது காங்கிரஸ் கட்சி

இஸ்லாமிய பயங்கரவாதிகளின் விடுதலைக்காக தமிழ் நாட்டின் இந்தியாவின் எழுத்தாளர்கள் போராடுகிறார்கள்

மேதாவிகளோ இஸ்லாமியர்கள் பாதுகாப்பற்ற உணர்வின் காரணமாக குண்டு வைக்கிறார்கள் என்று முஸ்லீம்களின் பயங்கரவாதத்திற்கு ஆதரவாக நியாயம் பேசுகிறார்கள். மனசாட்சியையே விற்கிறார்கள்

இப்படி தலைவர்களும் சிந்தனையாளர்களும் அறிவு ஜீவிகளும் ஒட்டு மொத்தமாக இந்துக்களுக்கு எதிராகச் செயல் பட்டால் இந்தியாவில் இந்துக்களுக்குப் பாதுகாப்பு ஏது? யாரை அவர்கள் நம்ப முடியும்?

இந்த நிலையில் இந்துக்கள் இருப்பதற்கு யார் காரணம்?

இந்த பயங்கரமான நிலையில் நாடு இருப்பதற்கு யார் காரணம்?

டெல்லியிலும், மும்பையிலும், காசியிலும், இந்துக்கள் லட்சக்கணக்கில் கொல்லப் படுவதற்கு யார் காரணம்?

புத்தி கெட்டுப் போய் சோனியாவுக்கும் காங்கிரசுக்கும் மன்மோகன் போன்ற மானம் கெட்ட பிறவிகளுக்கும் ஓட்டுப் போட்ட இந்துக்கள்தான் இதற்கெல்லாம் காரணம். நாம் பலவீனமாக இருந்தால் ஏன் முஸ்லீம் தீவீரவாதி வந்து குண்டு வைக்க மாட்டான். நாம் கருணாநிதிக்கும் மன்மோகனுக்கும் சோனியாவுக்கும் ஓட்டுப் போட்டால் நமக்கு இந்த நிலை வராமல் என்ன செய்யும்? இந்தியாவின் எதிர்காலம் இந்திய ஓட்டர்கள் கைகளில் மட்டுமே உள்ளது.

அடுத்த முறை ஓட்டுப் போடும் பொழுது கீழ்க்கண்ட ஒவ்வொரு இந்தியனும் இந்துவும் கேட்க்க வேண்டும்

நான் ஓட்டுப் போடப் போகும் கட்சி தீவிரவாதத்தை எந்த விதத்திலாவது ஆதரித்துள்ளதா? சி மி க்கும் இஸ்லாமியத் தீவீர்வாதத்திற்கும் ஆதரவாகச் செயல் பட்டுள்ளதா? பொடா போன்ற சட்டங்களை எதிர்த்துள்ளதா? இந்துக்களின் நம்பிக்கைக்கும் கடவுள்களுக்கும் எதிராகச் செயல் பட்டுள்ளதா? முஸ்லீம் தீவீரவாதத்திற்கு ஆதரவாக மதவாத அரசியல் செய்துள்ளாதா என்று கேள்வி கேட்ட்டுக் கொள்ள வேண்டும்.

மேற்கொண்ட கேள்விகளில் ஒரு கேள்விக்காவது ஆம் என்று பதில் கிடைத்தால் அந்தக் கட்சியை எதிர்த்து ஓட்டுப் போட வேண்டும் அப்படி போட்டால் இந்துக்களின் உயிர் இனியாவது பாதுகாக்கப் படும் இல்லையென்றால் கடவுள் கூட அவர்களின் உயிரைப் பாதுகாக்க மாட்டார்.

இந்துக்களே ஒன்று படுவீர். நம் எதிரிகள் நம் அரசியல்வாதிகளே. அவர்களில் தீவீரவாதத்திற்கு ஆதரவானவானவர்களைக் கண்டு கொண்டு களை எடுங்கள். இல்லா விட்டால் உங்கள் குழந்தைகள் அநாதைகளாகத் தெருவில் நிற்க வேண்டி வரும்.

இந்த பயங்கரவாதத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கக் கூடிய தீர்வு உங்கள் கைகளில்தான் உள்ளது.

வந்தேமாதரம்
விஸ்வாமித்ரா

said...

கடந்த ஐந்து வருடங்களில் இந்தியாவில் நடந்த இஸ்லாமிய பயங்கரவாதம்., அனைத்தும் முஸ்லீம்களால் நடத்தப் பட்ட படுகொலைகள். இதற்கு முடிவு என்ன? இந்துக்கள் என்று தங்களைப் பாதுகாத்துக் கொள்ளப் போகிறார்கள்? எப்படி? இன்னும் எத்தனை லட்சம் இந்துக்கள் கொல்லப் பட வேண்டும்? இந்தப் படுகொலைகளுக்கெல்லாம் யார் பொறுப்பு?சிந்தியுங்கள் இந்துக்களே. விழித்தெழுங்கள். உங்கள் எதிரிகளை இனம் கண்டு கொள்ளுங்கள். அடுத்த தேர்தலில் அந்த எதிரிகளைப் புறக்கணியுங்கள் அது ஒன்றுதான் நம்மால் வன்முறையற்ற வழியில் நம் பாதுகாப்பைச் செய்து கொள்ளக் கூடிய ஒரே வழி. இஸ்லாமிய வர்த்தகத் தளங்கள் அனைத்தும் தீவீரவாதிகளுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவியும் ஆதரவு செலுத்தியும் வருகின்றன. நாம் அவர்கள் கடையில் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாயிலும் 20 பைசா நம்மை அழிக்கவே பயன் படுத்தப் படுகின்றன. ஆம் இஸ்லாமியக் கடைகள் இந்தப் பயங்கரவாதிகளின் வழக்குகளை நடத்த பணம் அளிக்கின்றன. இவர்களுக்குத் தண்டனை கொடுத்தால் தங்கள் கடைகளை அடைத்து தீவீரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கின்றன. அடுத்த முறை முஸ்லீம் கடையில் சாமான் வாங்கும் முன்னால் நன்கு தீர விசாரித்த பின் வாங்குங்கள் அல்லது முற்றிலும் தவிர்த்து விடுங்கள் தீவீரவாதத்திற்கு நாம் கொடுக்கும் வியாபார ஆதரவும் ஒரு காரணம் என்பதை உணர்ந்து செயல் படுங்கள்.

இஸ்லாமிய பயங்கரவாத ஆதரவு அரசியல்வாதிகளான சோனியா, மன்மோகன், லல்லு, முலயம், கருணாநிதி ஆகியோரை இனம் கண்டு புறக்கணியுங்கள்

இஸ்லாமியத் தீவீர்வாதிகளை ஆதரிக்கும் வர்த்தக நிலையங்களை புறக்கணியுங்கள்

இந்த்துக்களே ஒன்று படுங்கள் நம் குழந்தைகள் இனியும் நம் சொந்த நாடிலேயே அநாதைகளாக மாற வேண்டாம். விழிப்புணர்வு கொள்ளுங்கள். இந்தப் பட்டியல் இனியும் நீள நீங்கள் அனுமதிக்கப் போகிறீர்களா அல்லது முற்றுப் புள்ளி வைக்கப் போகிறீர்களா என்பதை முடிவு செய்யுங்கள். அடுத்த தேர்தலில் ஒற்றுமையுடன் இந்த பயங்கரவாத ஆதரவு அரசியல் கட்சிகளை தோற்கடியுங்கள் இல்லா விட்டால் உங்கள் உயிர் உங்கள் கையில் இல்லை. உறங்கியது போதும். இனிமேலும் நம்மை நாமே அழித்துக் கொள்ளக் கூடாது.

Following is a chronology of some of the major attacks in India in the past five years:

March 13, 2003 - A bomb attack on a commuter train in Mumbai kills 11 people.

Aug. 25, 2003 - Two car bombs kill about 60 in Mumbai.

Aug. 15, 2004 - A bomb explodes in Assam, killing 16 people, mostly schoolchildren, and wounding dozens.

Oct. 29, 2005 - Sixty-six people are killed when three blasts rip through markets in New Delhi.

March 7, 2006 - At least 15 people are killed and 60 wounded in three blasts in the northerly Hindu pilgrimage city of Varanasi.

July 11, 2006 - More than 180 people are killed in seven bomb explosions at railway stations and on trains in Mumbai that are blamed on Islamist militants.


May 18, 2007 - A bomb explodes during Friday prayers at a anti-wahhabi mosque in Hyderabad, killing 11 worshippers.


Aug. 25, 2007 - Three coordinated explosions at an amusement park and a street stall in Hyderabad kill at least 40 people.

May 13, 2008 - Seven bombs rip through the crowded streets of Jaipur, killing at least 63 people in markets and outside Hindu temples.

July 25 - Eight small bombs hit the IT city of Bangalore, killing at least one woman and wounding at least 15.

July 26 - At least 16 small bombs explode in Ahmedabad killing 45 people and wounding 161. A little-known group called the "Indian Mujahideen" claims responsibility for the attack and the May 13 attack in Jaipur.

Sept 13 - At least five bombs explode in crowded markets and streets in the heart of New Delhi, killing at least 18 people and injuring scores more. The Indian Mujahideen again claim responsibility.

Nov 26 - At least 80 people were killed in a series of attacks apparently aimed at tourists in India's financial capital Mumbai on Wednesday. Police said at least 250 people had been wounded.


25 August 2004: 6 People died in two car bomb blasts in Mumbai.
5 July 2005: Terrorists attacked Ram Janma Boomi, Ayodhya.


28 July 2005: 13 killed and 50 injured in an explosion on board Shramjivi Express at Jaunpur Uttar Pradesh.


8 September 2006: 38 people killed and more than 100 injured when three bombs simultaneously exploded, including one in a Mosque at Malegon in Maharashtra.


19 February 2007: 68 people killed and dozens injured after four explosions on board the Lahore bound Samjhauta Express.


23 November 2007: 13 people killed and 40 wounded in a serial blast outside Courts in three cities of Uttar Pradesh.


1 October 2008 – Tripura - 5 dead and over 100 injured

30 October 2008 – Assam – 75 dead and over 200 injured

said...

//
"காஷ்மீரில் ஒரு referendum வைத்து, அதன் அடிப்படையில் காஷ்மீரை பிரித்துக் கொடுக்கும் பட்சத்தில், அங்குள்ள அனைத்துத் தீவிரவாத இயக்கங்களும் இந்தியாவுக்கு எதிரான பயங்கரத் தாக்குதல்களை நிறுத்தி விடுமா ? பதில் தெரியவில்லை!"
//

என்ன ஒரு ஆபத்தனமான பொறுப்பற்ற பேச்சு பாலா! அதுவும் இந்த நேரத்தில்!


இன்றைய நிலையில் என்ன மண்ணாங்கட்டி ரெஃபரண்டம் காஷ்மீரில் நடத்த முடியும். நீங்களே (உங்களை அறியாமலேயே?) ரெஃபரண்டத்தின் முடிவையும் முன்கூட்டியே அறிவித்து விட்டீர்கள் என்பதைக் கவனித்தீர்களென்றால் ரெஃபரண்டம் எப்படிப்பட்ட ஃபார்ஸாக இருக்கும் என்று உணர முடியும்.

இந்த மனநிலைக்கு தள்ளப்படுவதைத்தானே ஜிஹாதி பயங்கரவாதிகளும் எதிர்பார்க்கிறார்கள்!.

இத்தனை வருடம் குளிரிலும் பனியிலும் குடும்பம் பிரிந்து நின்று, நிலையற்ற வாழ்க்கை வாழ்ந்து, எல்லை காக்க செத்துப்போன பல்லாயிரக்கணக்கான நாட்டு வீரர்கள் உங்களுக்கு நினைவுக்கு வரவில்லையா? 101 பேர் செத்தவுடன் பிரித்துத்தரலாமா எனப்பேசுகிற அளவுக்கு இருக்கிறதா உங்களது டெரரைஸ்ட் மனோநிலை? இதைத்தானே ஜிஹாதி பயங்கரவாதமும், பாகிஸ்தானும் எதிர்பார்க்கிறது.

அடுத்து ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு 100 பேரைக்கொல்லத் தொடங்கினால் அவற்றையும் பிரித்து விடலாம்தான், இல்லையா?

ஜிஹாதி பயங்கரவாதத்திற்கு ஏராளமான காரணங்கள் எப்போதுமே கிடைத்துக் கொண்டிருக்கும். பயந்து பணிபவர்களுக்கோ எப்போதுமே நிம்மதி கிடைக்காது. இந்த நேரத்தில் சட்டங்களையும் எல்லைகளையும் பாதுகாப்பு படைகளையும் வலுப்படுத்தி எப்படி ஹிந்துஸ்தானத்தை பலப்படுத்தி காப்பது என்றுதான் யோசிக்க வேண்டுமே தவிர மூட்டைப்பூச்சி பயங்கரவாதத்திற்கு பயந்து வீட்டை இடிப்பது பற்றிப்பேசக் கூடாது.

இந்தியாவும் அதன் தேசியமும் நாசமாக வேண்டும் என்று எண்ணி இந்த வரிகளை எழுதியிருக்க மாட்ட்டீர்கள்தான். தயவு செய்து இந்த வரிகளை நீக்கி விடுங்கள்.

அருணகிரி.

enRenRum-anbudan.BALA said...

அனானி,

//ஆம் இஸ்லாமியக் கடைகள் இந்தப் பயங்கரவாதிகளின் வழக்குகளை நடத்த பணம் அளிக்கின்றன. இவர்களுக்குத் தண்டனை கொடுத்தால் தங்கள் கடைகளை அடைத்து தீவீரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கின்றன. அடுத்த முறை முஸ்லீம் கடையில் சாமான் வாங்கும் முன்னால் நன்கு தீர விசாரித்த பின் வாங்குங்கள் அல்லது முற்றிலும் தவிர்த்து விடுங்கள் தீவீரவாதத்திற்கு நாம் கொடுக்கும் வியாபார ஆதரவும் ஒரு காரணம் என்பதை உணர்ந்து செயல் படுங்கள்.
//

நீங்கள் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அனைவரும் ஆதிரிக்கிறார்கள் என்று பொதுமைப்படுத்துதல் மேலும் பிரிவினையையும், வெறுப்பையும் மட்டுமே வளர்க்கும். அது உண்மைக்கு புறம்பானது. அது நம் நாட்டுக்கு நல்லதல்ல. தயவு செய்து இது போல இனி எழுத வேண்டாம்.
எ.அ.பாலா

said...

பாவம், போலி செக்யூலரிச வியாதி உங்கலையும் பீடித்திருக்கிறது.

இந்தப் பதிவில் அருணகிரி சொன்னது போல் நிறைய விஷயங்கள் மேம்போக்காக எழுதப்பட்டுள்ளது.

:)

VANJOOR said...

NO MERCY SHOULD BE SHOWN TO ANY TERRORIST FROM ANY SOURCE AS THEY ARE KILLING THE INNOCENTS WITHOUT MERCY.

WE WANT PEACE PEACE PEACE AND THE RIGHT FOR EACH AND EVERY CITIZEN OF INDIA TO LIVE IN PEACE AND HARMONY WITH ONE ANOTHER.

I AM VERY SADDENED AND HAVE NO WORDS TO EXPRESS MY SAD FEELINGS.

WE THE MUSLIMS WHO INITIATED FREEDOM STRUGGLE AGAINST THE BRITISH ARE SONS OF THE SOIL OF INDIA WILL NEVER EVER WANT TO SEE INDIA DEFEATED FOR ANY REASONS WHATSOEVER.

we do not want any ousiders from any source to commit crimes under the guise of helping indian muslims.

தம் இன்னுயிரைப் பறி கொடுத்த அப்பாவிகளான பொதுமக்களின் குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கல்கள்!

யாரால் கொலை செய்யப் பட்டிருந்தாலும் பாதுகாப்புப் பணியில் உயிர் நீத்தக் கடமை தவறாத காவலர்களுக்கு நமது சல்யூட் உரித்தாகட்டும்.Vanjoor வாஞ்ஜுர்
**********
THE FOLLOWINGS ARE JUST A FEW IN REPLY TO SOME OF THE COMMENTORS
WHO ARE SPREADING HATRED AGAINST THE MUSLIMS CITING AND BLAMING THE MUSLIM COMMUNITY TOTALLY FOR ALL THE BOMBING INCIDENTS IN THE COMMENTS OF THIS BLOG.

FOR THEM TO READ:-
குமுதம் ரிப்போர்ட்.அம்பலமாகும் இந்து தீவிரவாதம்.அதிர்ச்சியில் அத்வானி. பதற்றத்தில் பரிவாரங்கள்.

http://vanjoor-vanjoor.blogspot.com/2008/11/blog-post_27.html
****
VIDEO. சந்தி சிரிக்கிறது தேசப்பற்று!!ஆர். எஸ். எஸ் தலைவர்களைக் கொல்லத் தீவிரவாதிகள் திட்டம்

http://vanjoor-vanjoor.blogspot.com/2008/11/video.html
**********

உருவாக்கப் படும் போலித் தீவிரவாதிகள்! கருணாநிதிக்கே தெரியாத பயங்கர உண்மைகள்

http://vanjoor-vanjoor.blogspot.com/2008/11/blog-post_23.html

*********
குண்டு வெடிப்பு பயங்கரவாதத்தின் மாஸ்டர்மைண்ட் நானே! - இந்திய இராணுவ உயர் அதிகாரி ஒப்புதல்.

http://vanjoor-vanjoor.blogspot.com/2008/11/blog-post_14.html

**************
விடியோ--.மெக்கா, மதீனாவை தங்களுடையது என பாப்ரி மஸ்ஜிதை இடித்த பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ்.-

http://vanjoor-vanjoor.blogspot.com/2008/11/blog-post_190.html

**************
விடியோ. குண்டு தயாரிக்கும் வேளையில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் பலி

http://vanjoor-vanjoor.blogspot.com/2008/11/blog-post_6857.html

**************
இந்து மதத் தீவிரவாதம் அம்பலம் .ஆயுதப் பயிற்சி பெற்ற 54 பேரைக் காவல்துறை தேடுகிறது

http://vanjoor-vanjoor.blogspot.com/2008/11/54.html

பிச்சைப்பாத்திரம் said...

//இவர்களின் உயிர் மதிப்பற்றது. தீவிரவாத ஒழிப்புக்கு இவர்களின் சீரிய பணி / தலைமைப்பண்பு நாட்டுக்கு மிக மிக அவசியம்.//

மிகச்சரி. பின்னாலிருந்து படையை வழிநடத்த வேண்டிய கார்கரே எப்படி முன்னால் சென்று பலியானார் என்று தெரியவில்லை.

said...

நடு நிலைமை வகிப்பதாகவும், பதிவு /பின்னூட்ட சுதந்திரத்தை காப்பாற்றுகிறேன் என்ற பெயரில் மத அடிப்படை வாதத்திற்கு வால் பிடிக்கும் வாஞ்சூர் போன்றவர்களின் பதிவுக்கு சம்மந்தமில்லாத பின்னூட்டத்தை வெளியிடுவது நகைப்புக்கிடமளிக்கிறது.

said...

//இப்போது டோண்டு ராகவன் இன்னும் ஒன்று கூற ஆசைப்படுவான். இஸ்ரவேலர்களை நமது அதிகாரிகள் கலந்தாலோசிப்பது நலம். அவர்களைவிட அதிகத் திறமைசாலிகள் இந்த விஷயத்தில் வேறு யாரும் இல்லை//

எதுக்கு சார் வம்பு.. பேசாம காண்ட்ராக்ட் பேஸிஸ்ல மொத்த இந்தியாவையும் ஒரு தொள்ளாயிரம் வருசத்துக்கு இஸ்ரவேலர்களிடம் கொடுத்துவிடுவது இன்னும் உசிதம். உங்களுக்குப் பிடிச்சிருந்தா புஷ்ஷை வேணுமின்னா ஆட்டைக்கு சேர்த்துக்கலாம்... அப்பால எவனுக்காவது நம்ப மேல கைவைக்க தில்லு வருமா இன்னா?

ராஜா

said...

அருணகிரி said... @ 9:55 AM, November 28, 2008

+++++++++++++++++++++++++++++++

Blogger enRenRum-anbudan.BALA said.. @ 9:57 AM, November 28, 2008

+++++++++++++++++++++++++++++++

அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தென்னாட்டு வேங்க தான் ஒத்துக்கோ ஒத்துக்கோ

enRenRum-anbudan.BALA said...

அனானி,
//அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தென்னாட்டு வேங்க தான் ஒத்துக்கோ ஒத்துக்கோ
//
இந்த மாதிரி ஒரு பதிவில் வந்து இப்படி பாட்டு பாட வேண்டிய அவசியமென்ன ? அருணகிரி மெயிலில் அனுப்பிய மேட்டரை கமெண்ட்டாக போடக் கூடாதா? அவரிடமே கூட கன்பர்ம் பண்ணிக் கொள்ளலாம். இதைப் போய் ஒரு பெரிய கண்டுபிடிப்பு மாதிரி எண்ணி துள்ளிக் குதிக்கும் உங்களைப் பார்த்தால் பரிதாபமே மிஞ்சுகிறது!!!

said...

எ அ பாலா

நான் ஜோடித்து எதையும் எழுதவில்லை. உங்களுக்குப் பல விஷயங்கள் தெரியாது. அனைத்து இஸ்லாமியக் கடைகளும் வர்த்தக நிறுவனங்களும் தீவீர்வாதிகளுக்கு ஏதாவது ஒரு விதத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரவு தெரிவித்தே வருகிறார்கள். இதற்கு அரசு உளவுத் துறையிடம் ஆதாரங்கள் உள்ளன. உதாரணத்திற்கு ஒரு விஷயம் சொல்லுகிறேன் நீங்களோ போய் சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்

இமாம் அலி என்ற பயங்கரமான தீவீர்வாதி பெங்களூரில் கொல்லப் பட்ட பொழுது மதுரையில் அனைத்து இஸ்லாமிய நிறுவனங்களும் அடைக்கப் பட்டன. அவன் இந்துக்களை எப்படி அழிக்க வேண்டும் என்று தீட்டிய திட்டத்தை ஜூ விகடனே வெளியிட்டது. அப்ப்பேர்ப்பட்ட படு பயங்கர தீவீரவாதியை மதுரையில் உள்ள அனைத்து இஸ்லாமியக் கடைகளும் ஆதரித்தன. அவன் கொல்லப் பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மதுரையில் ஊர்வலம் சென்றார்கள். பந்த் நடத்தினார்கள். அவன் கொலைக்குப் பழிக்குப் பழி வாங்குவோம் என்று அனைத்து முஸ்லீம்களும் சபதம் மேற்கொண்டார்கள். இது அனைத்தும் எல்லா பத்திரிகைகளிலும் வெளி வந்த நிஜம். நான் எதையும் இங்கு உருவாக்கிக் கட்டுக் கதை சொல்லவில்லை. நீங்கள் தாராளமாக க்ராஸ் செக் செய்து கொள்ளலாம்.

ஆகவே மீண்டும் சொல்கிறேன். நீங்கள் உங்களுக்கே குண்டு வைத்துக் கொள்ள வேண்டுமானால். சொந்தச் செலவிலேயே தீவீரவாதம் செய்து கொள்ள வேண்டுமானால் தாராளமாக முஸ்லீம் கடைகளை ஆதரியுங்கள். உங்கள் பெண்டு பிள்ளைகள் உங்கள் கண் முன்னே வெடித்துச் சிதறிச் சாக வேண்டுமானால் தாராளமாக முஸ்லீம் கடைகளில் சாமான் வாங்குங்கள். உங்கள் பிள்ளைகள் நாளைக்கு அநாதையாக நடுத்தெருவில் நிற்க வேண்டுமானால் மதச் சார்பின்மை பேசிக் கொண்டு முஸ்லீம் நிறுவனங்களை ஆதரியுங்கள்.

ப்ரேம்ஜி, கலாம், ஷேக் சின்ன மொளலானா போன்ற எண்ணற்ற இஸ்லாமியர்கள் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை நான் மறுக்கவில்லை ஆனால் ஆனால் அவர்களையும் மற்றவர்களையும் நீங்கள் எப்படி வேறு பாடு காணப் போகிறீர்கள். ஒரு இஸ்லாமியக் கடையில் நீங்கள் கொடுக்கும் பணம் தீவீரவாதத்திற்கு உறுதியாகப் போகாது என்பதை நீங்கள் எப்படி உறுதி செய்யப் போகிறீர்கள். உதாரணமாக ஒவ்வொரு முஸ்லீம் கடையும் தங்கள் வருமானத்தில் ஒரு பங்கை தங்கள் மசூதிக்கு அளிக்கிறார்கள் அதன் பின் அந்த நிதி எங்கு போகிறது யாருக்குப் போகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? பிறரைக் கொன்ற பாவம் உங்களைச் சேர வேண்டுமா, அப்பாவி இந்துக்களின் ரத்தம் உங்கள் கைகளில் நிரந்தரமான கறையாகப் படிய வேண்டுமா? அப்படியானால் தாரளமாக முஸ்லீம் கடைகளை ஆதரியுங்கள் நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. நான் சொல்வதில் சந்தேகம் இருப்பின் உங்களுக்குத் தெரிந்த எந்த உளவு போலீஸ்காரரிடமும் விசாரித்து உண்மை என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள். இஸ்லாமியத் தீவீர்வாதம் முற்றிலும் அழியும் வரை நாம் இந்த பகிஷ்கரிப்பைச் செய்தே ஆக வேண்டும். இல்லா விட்டால் இன்றைக்கு உடல் வெடித்துச் சிதறிய பிள்ளைகள் நாளைக்கு நம் குழந்தைகளாகக் கூட இருக்கும் நிலை நமக்கே வரலாம். எச்சரிக்கை செய்கிறேன் ஏற்றுக் கொள்வதும் புறக்கணிப்பதும் உங்கள் விருப்பம்

said...

எ அ பாலா

நான் ஜோடித்து எதையும் எழுதவில்லை. உங்களுக்குப் பல விஷயங்கள் தெரியாது. அனைத்து இஸ்லாமியக் கடைகளும் வர்த்தக நிறுவனங்களும் தீவீர்வாதிகளுக்கு ஏதாவது ஒரு விதத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரவு தெரிவித்தே வருகிறார்கள். இதற்கு அரசு உளவுத் துறையிடம் ஆதாரங்கள் உள்ளன. உதாரணத்திற்கு ஒரு விஷயம் சொல்லுகிறேன் நீங்களோ போய் சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்

இமாம் அலி என்ற பயங்கரமான தீவீர்வாதி பெங்களூரில் கொல்லப் பட்ட பொழுது மதுரையில் அனைத்து இஸ்லாமிய நிறுவனங்களும் அடைக்கப் பட்டன. அவன் இந்துக்களை எப்படி அழிக்க வேண்டும் என்று தீட்டிய திட்டத்தை ஜூ விகடனே வெளியிட்டது. அப்ப்பேர்ப்பட்ட படு பயங்கர தீவீரவாதியை மதுரையில் உள்ள அனைத்து இஸ்லாமியக் கடைகளும் ஆதரித்தன. அவன் கொல்லப் பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மதுரையில் ஊர்வலம் சென்றார்கள். பந்த் நடத்தினார்கள். அவன் கொலைக்குப் பழிக்குப் பழி வாங்குவோம் என்று அனைத்து முஸ்லீம்களும் சபதம் மேற்கொண்டார்கள். இது அனைத்தும் எல்லா பத்திரிகைகளிலும் வெளி வந்த நிஜம். நான் எதையும் இங்கு உருவாக்கிக் கட்டுக் கதை சொல்லவில்லை. நீங்கள் தாராளமாக க்ராஸ் செக் செய்து கொள்ளலாம்.

ஆகவே மீண்டும் சொல்கிறேன். நீங்கள் உங்களுக்கே குண்டு வைத்துக் கொள்ள வேண்டுமானால். சொந்தச் செலவிலேயே தீவீரவாதம் செய்து கொள்ள வேண்டுமானால் தாராளமாக முஸ்லீம் கடைகளை ஆதரியுங்கள். உங்கள் பெண்டு பிள்ளைகள் உங்கள் கண் முன்னே வெடித்துச் சிதறிச் சாக வேண்டுமானால் தாராளமாக முஸ்லீம் கடைகளில் சாமான் வாங்குங்கள். உங்கள் பிள்ளைகள் நாளைக்கு அநாதையாக நடுத்தெருவில் நிற்க வேண்டுமானால் மதச் சார்பின்மை பேசிக் கொண்டு முஸ்லீம் நிறுவனங்களை ஆதரியுங்கள்.

ப்ரேம்ஜி, கலாம், ஷேக் சின்ன மொளலானா போன்ற எண்ணற்ற இஸ்லாமியர்கள் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை நான் மறுக்கவில்லை ஆனால் ஆனால் அவர்களையும் மற்றவர்களையும் நீங்கள் எப்படி வேறு பாடு காணப் போகிறீர்கள். ஒரு இஸ்லாமியக் கடையில் நீங்கள் கொடுக்கும் பணம் தீவீரவாதத்திற்கு உறுதியாகப் போகாது என்பதை நீங்கள் எப்படி உறுதி செய்யப் போகிறீர்கள். உதாரணமாக ஒவ்வொரு முஸ்லீம் கடையும் தங்கள் வருமானத்தில் ஒரு பங்கை தங்கள் மசூதிக்கு அளிக்கிறார்கள் அதன் பின் அந்த நிதி எங்கு போகிறது யாருக்குப் போகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? பிறரைக் கொன்ற பாவம் உங்களைச் சேர வேண்டுமா, அப்பாவி இந்துக்களின் ரத்தம் உங்கள் கைகளில் நிரந்தரமான கறையாகப் படிய வேண்டுமா? அப்படியானால் தாரளமாக முஸ்லீம் கடைகளை ஆதரியுங்கள் நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. நான் சொல்வதில் சந்தேகம் இருப்பின் உங்களுக்குத் தெரிந்த எந்த உளவு போலீஸ்காரரிடமும் விசாரித்து உண்மை என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள். இஸ்லாமியத் தீவீர்வாதம் முற்றிலும் அழியும் வரை நாம் இந்த பகிஷ்கரிப்பைச் செய்தே ஆக வேண்டும். இல்லா விட்டால் இன்றைக்கு உடல் வெடித்துச் சிதறிய பிள்ளைகள் நாளைக்கு நம் குழந்தைகளாகக் கூட இருக்கும் நிலை நமக்கே வரலாம். எச்சரிக்கை செய்கிறேன் ஏற்றுக் கொள்வதும் புறக்கணிப்பதும் உங்கள் விருப்பம்

அருணகிரி said...

நான் எழுதிய கமெண்ட்தான் அது. தனி மடலில் அனுப்பி, அந்த வரிகளை நீக்குமாறு கேட்டுக்கொண்டேன். அவ்வாறு நீக்கி விட்டால், கமெண்ட்டில் கூட அந்த வரிகள் இடம் பெறாமல் இருக்கும் என்ற எண்ணத்தில் தனிமடலாக அனுப்பினேன். தான் எழுதியதை நீக்காமல், என் கமெண்டை என் அனுமதியுடன் பிரசுரித்திருக்கிறார் எ.அ. பாலா. அந்த வரிகள் தவறானவை என்பதே இப்போதும் என் கருத்து.

enRenRum-anbudan.BALA said...

அருணகிரி,
தெளிவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி.

அய்யா அனானி,
இப்ப ஒத்துக்கறீங்களா ?

said...

//அய்யா அனானி,
இப்ப ஒத்துக்கறீங்களா ?//

ண்ணா நீங்க யோக்கியருங்க.
தங்கமானவருங்க..
தங்கமான தங்கமானவருங்க..

ண்ணா.. வர்ட்டுங்களாணா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails